Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeவிளையாட்டுபாதுகாப்பு சோதனையில் Suzuki Swiftக்கு கிடைத்த அதிர்ச்சியூட்டும் ரேட்டிங்..!

பாதுகாப்பு சோதனையில் Suzuki Swiftக்கு கிடைத்த அதிர்ச்சியூட்டும் ரேட்டிங்..!

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து NCAP சோதனையில் சுசுகி ஸ்விஃப்ட் 1 நட்சத்திர மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து சந்தைகளில் விற்பனை செய்யப்படும் Suzuki Swift hatchback கார், ANCAP (Australasian New Car Assessment Program) மூலம் பாதுகாப்பு சோதனையில் பரிசோதிக்கப்பட்டது.

இதில், இந்த காருக்கு வெறும் 1 நட்சத்திர மதிப்பீடுதான் கிடைத்தது.

எனினும், இது அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் வாகனம் 3 நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளது, காரணமாக அதன் சில structural வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வந்தோருக்கான பாதுகாப்பு (Adult occupancy result) சோதனையில் ஸ்விஃப்ட் 40 மதிப்பில் 18.88 புள்ளிகள் பெற்றது.

அதேபோல், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில், 49-க்கு 29.24 புள்ளிகள் பெற்றது.

இந்த மதிப்பீடு அவுஸ்திரேலியாவின் Suzuki Swift Hybrid GL, GL+ மற்றும் GLX மொடல்களுக்கும், நியூசிலாந்தில் விற்பனை செய்யப்படும் GLS மற்றும் RSC மொடல்களுக்கும் பொருந்தும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments