தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வரும் நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மண்ணாங்கட்டி டெஸ்ட், டியர்ஸ் டூ டண்ட் டாக்கிக், ராக்காயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் நயன்தாரா பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருபபதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தில் சஞ்சய்தத் வில்லனாக நடிக்கிறார். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.