இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 445 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட்152 ஓட்டங்களையும், ஸ்டீவ்ன் ஸ்மித் 101 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.