கடந்த வருடங்களில் பண்டிகை காலத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் முட்டை விலை சடுதியாகக் குறைந்துள்ளது.
இதன்படி, முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
தற்போது தேவைக்கு மேலதிகமாகவே முட்டை இருப்பதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக முட்டை ஏற்றுமதி செய்ய வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் அநுர மாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் சந்தையில் மீண்டும் முட்டை விலை அதிகரிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.