மீட்டியகொடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 5 பேர் கைது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்டியகொட – பலிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த ஆணொருவரும் பெண் ஒருவரும் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர்.
49 வயதான தந்தையும் அவரது 29 வயதான மகளும் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுக்குள்ளான இருவரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மகள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.