அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மற்றும் மாணவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயது மாணவி ஒருவரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதுடன், அவர் தமது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேடிசன் காவல்துறை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.