யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் சுகயீனமொன்றுக்கு சிகிச்சை பெறுவதைத் தவிர வேறு எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரவேசிக்க முற்பட்டால் உடனடியாக காவல்துறையிடம் அறிவிக்குமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி நேற்று (16) வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறும் அறிவித்துள்ளார்.
வைத்தியசாலைப் பணிப்பாளர் தன்னை “ஐயா” என்று அழைக்காததால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிகக் கோபமடைந்து அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்திருந்தார்.
அந்தவகையில் அவர் மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் திடீரென நுழைந்து பிரச்சினைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.