மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ரஸ்ய அணுசக்தி பாதுகாப்புப் படையின் தலைவர் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இகோர் கிரில்லோவின் உதவியாளரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன
தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்தநாட்டு காவல்துறை முன்னெடுத்து வருகிறது