இரத்தினபுரி எலபாத்த பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கைத்துப்பாக்கி போன்ற வடிவிலான இரத்தினகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான தனியார் அருங்காட்சியகத்தில் குறித்த கல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்துப்பாக்கி வடிவ இரத்தினக்கல் சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி எலபாத்த பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளஞ்சிவப்பு நீலக்கல் மாணிக்கக்கல் கைத்துப்பாக்கி வடிவில் உள்ளது.
இரத்தினபுரி மாணிக்க அருங்காட்சியகத்தின் உரிமையாளரான நந்தன இந்த கல்லை கொள்வனவு செய்துள்ளார். இது 10.20 கரட் எடை கொண்டதாகும்.
உலகின் மாணிக்க கல் நகரமாக இரத்தினபுரி இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரத்தினபுரிக்கு வரவழைத்து அவர்களுக்கு இரத்தினக்கற்களை விற்பனை செய்வதற்காக இவ்வாறான தனித்துவமான மாணிக்க கற்களை சேகரித்து அருங்காட்சியகம் நடத்தப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்போதும் இரத்தினபுரி பகுதியில் இரத்தினக்கல் வியாபாரிகளால் பல தனியார் இரத்தினக்கற்கள் அருங்காட்சியகங்கள் நடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.