ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார்.
கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார்.
இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதற்கிடையே சல்மான் கானை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஹிந்தியில் தெறி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்தும் உள்ளார்.
படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அட்லீ விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.