Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeCinemaஅல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல்!

அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த 4-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியானது.

புஷ்பா படத்தைப் பார்க்க கதாநாயகன் அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு வந்தார். ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 24 வயது பெண் ஒருவர் இறந்தார்.

அவரது 8 வயது மகன் உயிருக்கு போராடியபடி சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண் நெரிசலில் சிக்கிய வழக்கில் தியேட்டர் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பெண் இறப்புக்கு காரணமான அல்லு அர்ஜூனை போலீசார் கடந்த 13-ந்தேதி கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

தெலுங்கானா ஐகோர்ட்டு அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதால் மறுநாள் காலை ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

ஐகோர்ட்டின் இடைக்கால ஜாமீனை எதிர்த்து போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனால் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமீன் பெறுவது குறித்து அல்லு அர்ஜுன் தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments