Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeLife Styleஇள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி?

இள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி?

முடி உதிர்தல் பிரச்சனை எந்த அளவுக்கு கவலையை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இள நரை பிரச்சனையும் நிம்மதியை தொலைத்துவிடும்.

அதற்கேற்ப இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

இன்றைய ஐ.டி. யுகத்தில் இளம் தலைமுறையினர் பலரும் இணையதளத்திலேயே கண்ணும், கருத்துமாக மூழ்கி இருப்பதும், நேர மேலாண்மையை கடைப்பிடிக்காமல் விரும்பிய உணவுகளை இஷ்டப்பட்ட நேரத்தில் ருசிப்பதும், முதுமையில் வர வேண்டிய நரை இளமையிலேயே வந்துவிடுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

திருமணம் செய்ய வேண்டிய வயதில் இப்படி இள நரையுடன் காட்சி அளிப்பது, இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைப்பதற்கு பெருந்தடையாக அமைந்துவிடுகிறது.

இள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? அதனை தடுப்பதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அது பற்றிய இணையதள தேடலும் அதிகரித்திருக்கிறது.

இளநரை வந்த பிறகு தடுப்பதற்கு முயற்சிப்பதை விட, இளநரை வராமல் காப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்…

கூந்தலை இளமையாக வைத்துக்கொள்ள, இளநரை இல்லாமல் பாதுகாத்து கொள்ள, நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமையும்.

நெல்லிக்காயை நன்கு அரைத்து சாறு பிழிந்து அதே அளவுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால் இளநரை வராமல் தடுக்கலாம். தலையில் ஆங்காங்கே ஓரிரு இள நரை முடிகள் இருந்தால் அதன் மீதும் தடவி வரலாம்.

இள நரை பாதிப்புக்குள்ளானவர்களின் அடுத்த கேள்வி, எதையாவது சாப்பிட்டால் இளநரை சரியாகுமா என்பது தான்.

இவர்கள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை.

தம் பெயரிலேயே “கரு” (மை) சேர்ந்த இந்த இலை நம் கூந்தலையும் நிச்சயம் கருமையாக மாற்றும்.

சிலருக்கு பித்தத்தினால் கூட தலையில் நரை தோன்றும்.

இவர்கள் காலையில் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில் இரண்டு துளி தேன் சேர்த்து பருகி வந்தால் பித்த நரை வந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும்.

நிறைய வீடுகளில் இப்பொழுதெல்லாம் மூங்கில் மரத்தை வாஸ்துவுக்காக வளர்க்கிறார்கள். மூங்கில் இலையும் சரி, அது தரும் அழகும் சரி நம்மை என்றுமே இளமையாக வைத்திருக்க உதவும்.

மூங்கில் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் இரண்டு வார காலம் வரை ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தடவி வந்தால், நரை இல்லாத முடி நிச்சயம் கிடைக்கும்.

வெந்தயம், சீரகம், வால்மிளகு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து பொடி செய்து அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் இள நரையால் வந்த மனக்குழப்பம் காணாமலேயே போய்விடும்.

தினமும் பல வகையான கீரை உணவுகளை சாப்பிடணும்.

கரிசலாங்கண்ணி கீரை நம் கண்ணுக்கு குளுமை தந்து, கூந்தலுக்கு இளமை தரக்கூடிய கீரை.

இந்த கீரையை நன்றாக அரைத்து, அதிலிருந்து சாறும் எடுத்து அதை அப்படியே தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயவைத்து தேய்த்து பாருங்கள். பசுமை மாறா இந்த கீரை, கருமை மாறா கூந்தலை பரிசளித்ததை எண்ணி பாராட்டுவீர்கள்.

முருங்கைகீரையும் முடி வளர்ச்சிக்கும், இளநரைக்கும் தீர்வு தரக்கூடியது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments