மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ காலமானார்.
66 வயதான இவர் மெக்சிகோவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ்.
90ஸ் கிட்ஸ் மனதில் சீனியர் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு.
சீனியர் ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் அனைவருக்கும் நினைவு வரும் எனலாம்
இந்நிலையில், சீனியர் ரே மிஸ்டீரியோ நேற்று (20) காலமானார்.
இவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை.
இவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது இரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.