நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரிலிருந்து துனித் வெல்லாலகே நீக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து ஆடுகளங்களின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மேலதிகமாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைக் குழாமில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு துனித் வெல்லாலகே நீக்கப்பட்டுள்ளதாக அணித்தலைவர் சரித் அசலங்க குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு பயணமாவதற்கு முன்னதாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.