Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsTechnologyவாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் CHAT GPT

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் CHAT GPT

மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான வாட்ஸ்அப் இருந்து வருகிறது.

இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர்.

உலகளவில் 300 கோடி பேர் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் சாட்-ஜிபிடி அம்சத்தை பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்துடன் சாட்டிங் மூலம் மனிதர்கள் உரையாட சாட் – ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

இது சாதாரண உரையாடல் தொடங்கி தொழில்துறையும் வளர்ந்து வரும் நுட்பமாக உள்ள நிலையில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் தற்போது வாட்ஸ்அப் செயலி மூலம் நேரடியாகவே சாட் -ஜிபிடி உடன் உரையாடும் அம்சத்தை அருகப்படுத்துவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 1-800-CHATGPT என்று அழைக்கப்படும் இந்த சாட் ஜிபிடி வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது.

விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் உரையாட 1-800-242-8478 என்ற எண்ணை அழைத்தால் போதுமானது. ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் மெட்டா ஏஐ வசதி உள்ள நிலையில் இந்த சாட் ஜிபிடி அறிமுகம் பயனர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக சாட்- ஜிபிடி குறித்து அதை பயிற்றுவிக்கும் குழுவில் பணியாற்றிய ஓபன் ஏஐ முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி[ 26 வயது] அதன் தீமைகள் குறித்து எச்சரித்திருந்தார்.

கடந்த நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments