ஜேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த வேளையில் மக்கள் கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி சென்று அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
41 பேர் ஆபத்தான நிலையிலும், 86 பேர் படுகாயங்களுடனும், 78 பேர் காயங்களுடனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்துக்குள் காரை தாறுமாறாக ஓட்டிய நபர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த வைத்தியர் தலேப் (50) என தெரியவந்துள்ளது.
அவரை பொலிஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
“காரை ஓட்டிய வைத்தியர் தனது எக்ஸ் தளத்தில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தீவிரவாத கருத்தை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஜெர்மனி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தோம்” என்று சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.