Wednesday, May 28, 2025
HomeSportsபுதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது.

பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

315 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து களமிறங்கவுள்ளது.

இப்போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments