Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeCinemaஅல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல்

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார்.

அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நேற்று தெலுங்கானா சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுக்குறித்து நடிகர் அல்லு அர்ஜூ அவரது தரப்பு கருத்தை முன் வைத்தார்.

இச்சம்பவத்தை குறித்து அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆன்லைனில் அவர்களது கருத்தை அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்களை வீசி தக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக கிடைத்த முதற்கட்ட தகவலில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும் வீட்டின் மீது கற்களை வீசியும் மாணவர் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலையிட்டு, பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேஏசி) 8 பேரை கைது செய்து, ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments