அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்பி எடுக்க முற்பட்ட இருவர் ரயிலில் மோதி உயிரிழந்தனர்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக இரத்தினபுரியிலிருந்து வருகைதந்த இருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதிய நிலையில் குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.