மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐபோன்களை 2026-ஆம் ஆண்டில் அறிமுகமாகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக, இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜார்னல் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஐபோனின் பிளஸ் மாடலை நிறுத்த திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், அடுத்த ஆண்டு ஐபோன் 17 சீரிஸ் அறிமுகத்தின்போது புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஐபோன் 17 ஸ்லிம் அல்லது ஏர் மூலம் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஐபோன் 17 தொடர் 2025 ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் வரிசையானது ஐபோன் 17 ஏர் மூலம் நிலையான மாறுபாடுகளுடன் ஒரு புதிய மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது மெலிதான மற்றும் குறைந்த எடையுடன் வரும் புதிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன், ஐபோன் 17 ப்ரோ மாடல்களை விட குறைவான விலையில் கிடைக்கும் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட தலைமையிடமாகக் கொண்ட குபெர்டினோ தொழில்நுட்ப நிறுவனமானது, இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை 2026 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கான இலக்குடன் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.