இங்கிலாந்தில் காணாமல்போன பெண்ணொருவரை தேடும் பணியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் 61 வயது நபரை கைது செய்தனர்.
ஹங்கேரியைச் சேர்ந்த மரியன் (55) என்ற பெண், போல்டனில் கடந்த 14ஆம் திகதி காணாமல் போனதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரை தேடும் பணியில் 10 நாட்களாக ஈடுபட்டனர். இந்த நிலையில் திங்களன்று ஒரு பெண்ணின் உடல் அவரது (மரியன்) விளக்கத்துடன் பொருந்திய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால், முறையான அடையாளம் இன்னும் நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், 61 வயதான நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.