தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கட்டண அறவிடுவது தொடர்பான வரையறைகளை விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நஷ்டஈடாக ஹெக்டேயருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதேவேளை, 2025-04-01 மற்றும் 2025-08-31 க்கும் இடையில் 06 மார்பன் கச்சா எண்ணெய் கொள்கலன்களை வாங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
01-04-2025 முதல் 31-08-2025 வரையிலான காலகட்டத்தில் 06 மர்பன் வகை கச்சா எண்ணெயை வாங்குவதற்கு பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட சப்ளையர்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்காக 06 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், M/s ஆதித்யா பிர்லா குளோபல் டிரேடிங் (சிங்கப்பூர்) Pte. லிமிடெட் நிறுவனத்திற்கு கொள்முதல் வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.