Wednesday, December 25, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsTechnologyஜனவரி 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp இயங்காது...!

ஜனவரி 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp இயங்காது…!

ஜனவரி 1, 2025 முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்துகிறது. எனவே, புதிய போன்களுக்கு அப்கிரேட் செய்யுமாறு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தி வருகிறது.

WhatsApp ஒரு பிரபலமான டிஜிட்டல் தளமாகும். இது, கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது. ஆனால் சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் நிறுத்துகிறது.

பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தினால், போனை அப்கிரேட் செய்ய வேண்டும். தற்போதைய காலத்தில் டிஜிட்டல் தளங்களில் தினமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில் வாட்ஸ்அப் நிறுவனமானது புதிய அம்சங்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தை கொண்டு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் என சில மொடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போன்கள் வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்களை ஆதரிக்காததால் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்துகிறது.

என்னென்ன மொடல்கள்?

ஜனவரி 1, 2025 முதல் Samsung Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini, HTC, One X, One X+, Desire 500, Desire 601, Sony, Xperia Z, Xperia SP, Xperia T, Xperia VLG Optimus G, Nexus 4, G2 Mini, L90, Motorola, Moto G, Razr HD, Moto E 2014, ஆகிய ஸ்மார்ட்போன்களில் WhatsApp ஆதரவு நிறுத்தப்படும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments