Thursday, May 22, 2025
HomeSportsபாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் பாபர் அசாம்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் பாபர் அசாம்

தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக முல்தானில் நடந்த டெஸ்டில் பாபர் அசாம் நீக்கப்பட்டார்.

முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக கம்ரான் கலாம் அணியில் சேர்க்கப்பட்டார்.

கம்ரான் குலாம் முதல் போட்டியிலேயே சதம் அடித்து பாகிஸ்தான் டெஸ்டனில் தொடர்ந்து இடம் பிடித்தார். இந்த நிலையில் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாபர் அசாம் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (100 இன்னிங்ஸ்) 3997 ரன்கள் அடித்துள்ளார். இதில் 9 சதம், 26 அரைசதங்கள் அடங்கும். சராசரி 43.9 ஆகும்.

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-2 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 2-1 எனக் கைப்பற்றியது.

குர்ராம் ஷேசாத், முகமது அப்பாஸ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments