சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சாண்டா தொப்பிகளுடன் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
நாசா வெளியிட்ட வீடியோவில் சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும், மற்ற மூவர் சாண்டா தொப்பியை அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் இந்த வீடியோ இணைய வாசிகளிடையே பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள், தொழிநுட்ப பழுது காரணமாக பல மாதங்களாக அங்கேயே சிக்கியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள நாசா நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று டன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பிற அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் வீரர்களுக்கு அனுப்பப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தொகுப்பில் வான்கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், பிஸ்கட் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன.
இது தவிர, சில பணி சார்ந்த மற்றும் தொழிநுட்ப்ப பொருட்களும் அவர்களுக்கு இதில் அனுப்பி வைக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக நிலவில் முதலில் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது ரஷியா மற்றும் உலக நாடுகளை ஏமாற்ற ஒரு அறைக்குள் வைத்து அமெரிக்க அரங்கேற்றிய நாடகம் என்ற ஒரு கண்ணோட்டமும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.