Thursday, December 26, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsIndiaபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க பாடகி

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க பாடகி

உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்திய கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்நிலையில், ஆப்பிரிக்க-அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாடகி மேரி மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பின் மிகப்பெரிய பரிசாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எனது ரட்சகராகிய கிறிஸ்துவை கவுரவம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்தன. இந்தியாவில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாடகி மேரி மில்பென்னுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கையில், கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன.

இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம் என பதிவிட்டார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments