Friday, May 2, 2025
HomeSportsவிராட் கோலிக்கு 1 டிமெரிட் புள்ளி மற்றும் அபராதம்!

விராட் கோலிக்கு 1 டிமெரிட் புள்ளி மற்றும் அபராதம்!

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியும் வென்று 1-1 என சமநிலையில் உள்ளது.

பிரிஸ்பேனில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இன்று (26) தொடங்கியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர்.

இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ஓட்டங்கள் பெற்று ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இப்போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

குறிப்பாக பும்ராவின் ஓவரில் 4 ஓட்டங்களை விளாசினார்.

அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டமையால் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தியிருந்தார்.

கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி (Demerit Point) வழங்கப்பட்டது.

கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களைக் கண்டிக்கும் வகையில் டிமெரிட் புள்ளி (Demerit Point) வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments