Thursday, May 22, 2025
HomeCinemaஎம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

பிரபல மலையாள எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அவரது மறைவுக்கு கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.

மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது.

மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.

எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.

மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி என்று கூறியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments