பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத்- சைம் அயூப் களமிறங்கினர்.
மசூத் 17 ரன்களிலும் சைம் அயூப் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த பாபர் அசாம் மீண்டும் அணியில் இடம் பெற்றார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களமிறங்கிய பாபர் அசாம் 4 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சவுத் ஷகீல் 14, ரிஸ்வான் 27, சல்மான் 18, ஆமீர் ஜமால் 28 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் அரை சதம் விளாசினார். அவர் 54 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 211 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும் கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.