Sunday, May 25, 2025
HomeMain NewsSri Lankaஜாஎல பிரதேசத்திற்கு தீவிர பாதுகாப்பு - ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் கடமையில்

ஜாஎல பிரதேசத்திற்கு தீவிர பாதுகாப்பு – ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் கடமையில்

ஜாஎல பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான பட்டுவத்தே சாமர மற்றும் கந்தானையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான கொண்டே ரஞ்சி ஆகியோருக்கு இடையில் அதிகரிக்கும் மோதலால் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுபாயில் மறைந்திருப்பதாக கூறப்படும் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

போதைப்பொருள் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகை பணத்தை வழங்காதது தொடர்பாக பட்டுவத்தே சாமர, கொண்டே ரஞ்சியுடன் தகராறு செய்ததாகவும், அதன் காரணமாக ஒரு வாரத்திற்கு முன்னர் கொண்டே ரஞ்சியின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக ஜாஎல பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களில் ஜாஎல ஹெட்டிகம பிரதேசத்தில் 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் காரணமாக ஜாஎல பொலிஸார் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பொலிஸார் அந்தப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் புலனாய்வு அதிகாரிகளும் சிவில் உடையில் பொலிஸ் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments