Wednesday, May 14, 2025
HomeCinema'எனக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறினார்கள்' - நடிகர் சோனுசூட்

‘எனக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறினார்கள்’ – நடிகர் சோனுசூட்

பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார்.

ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை ‘ரியல் ஹீரோ’ என மக்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் “தனக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை தருவதாக சொன்னார்கள், ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்” என்று நடிகர் சோனுசூட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய சோனுசூட், “எனக்கு முதலில் முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது எனக்கு துணை முதல்வர், மாநிலங்களவை எம்.பி பதவியை தருவதாக கூறினார்கள். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.

அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். மக்கள் இரண்டு காரணங்களுக்காக அரசியலில் சேருகிறார்கள். ஒன்று பணம் சம்பாதிப்பதற்காக அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்காக… எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை.

அரசியலுக்கு வந்தால் எனக்கு டெல்லியில் வீடு, பதவி, உயர் பாதுகாப்பு உள்ளிட்ட ஆடம்பரங்கள் கிடைக்கும் என பலரும் தன்னிடம் கூறியுள்ளனர். அதை கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால் நான் இப்போது அதற்கு தயாராக இல்லை.

இப்போது எனக்குள் இன்னும் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கிறார். நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. சிறப்பாக வேலை செய்யும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments