உலகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.
வெப்பம் அதிகரிப்பு காரணமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
இதனால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடையும் நிலையில் உள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து பனிப்பாறை உடைந்து பிரிந்தது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதற்கு ஏ23ஏ என்று பெயரிடப்பட்டது.
சில வாரங்கள் கடலில் இந்த பாறை நகர்ந்தது.
அதன்பின் வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் உறைந்தது.
இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கும் நகராமல் உறைந்து இருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய தொடங்கி உள்ளது.
தற்போது மீண்டும் உடைந்து அந்த பாறை நகர தொடங்கி உள்ளது.
இந்த பனிப்பாறை அடுத்த ஒரு மாதத்திற்குள் உடைந்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ23ஏ பனிப்பாறை இனி இவ்வளவு பெரிதாக நீடிக்க முடியாது.
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக மேலும் உடையும்.
இதன் காரணமாக கடலில் நீர் மட்டம் உயரும். இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் அதிகரிக்கும்.