நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
இப்போதுள்ள உலக சூழலில் புகைப் பழக்கத்தைவிட சுற்றுச்சூழல் மாசின் காரணமாக தான் நிறைய நுரையீரல் பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுகிறது.
நமது நாட்டில் டெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இந்த மாசு அதிகரித்து வருகிறது.
இதனால் நுரையீரல் சார்ந்த நோய்களும் அதிகரித்து வருகின்றன.
இவற்றுக்கு தீர்வு காண சில உணவுகளை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.
* பூண்டில் நிறைய நச்சுக்களை போக்கும் மூலப்பொருட்கள் இருக்கின்றன. மேலும், இதிலிருக்கும் அல்லிசின் (allicin) நச்சுக்களை அழிக்கவும், எதிர்த்து போராடவும் உதவுகிறது. பூண்டு ஆஸ்துமா பிரச்சனை குறையவும், நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் வலுவளிக்கிறது.
* இஞ்சியிலும் நச்சுக்கொல்லி மூலப்பொருட்கள் இருக்கின்றன. அன்றாட உணவில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது. சுவாசக் குழாயில் தேங்கும் நச்சுக்களை அழிக்க இஞ்சி உதவுகிறது.
* பூண்டு, இஞ்சியை போலவே மஞ்சளிலும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் மூலப்பொருட்களும், நச்சுக்களை அழிக்கும் தன்மையும் நிறைய இருக்கிறது.
* ஆப்பிளில் நிறைய வகை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. இவை சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயனளிக்கிறது.
* பிளாக் பெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி உணவுகளில் ஆண்டி-ஆக்ஸிசிடன்ட்ஸ் இருக்கின்றன. இவை நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சார்ந்த தொற்று அல்லது நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
* திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம். ஒருவேளை உங்கள் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகும் காரணிகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீண்டு வர, சுத்தம் செய்ய திராட்சைப்பழம் உதவுகிறது.
* மாதுளையில் நிறைய நல்ல மூலப்பொருட்கள் இருக்கின்றன. இது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளின் வளர்ச்சியை தடுக்கும் குணமுள்ளது.
* இந்த உணவுகளில் அதிகளவில் மெக்னீசியம் உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை இருக்கும் நபர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு. மேலும், இது நுரையீரலின் திறனை அதிகரிக்க செய்து, செயல்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
* பிஸ்தாவை அப்படியே சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோயை தடுக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் கூட பிஸ்தா பயனளிக்கிறது.
* வரமிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தொண்டை புண், இருமல் சரியாகவும், சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் உதவுகிறது.
மேலும் மூச்சுக்குழாய் நெரிசலுக்கும் கூட இது நல்ல தீர்வளிக்கிறது.
* வைட்டமின் பி6, சி, ஃபோலிக் அமிலம் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் வெங்காயம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டது வெங்காயம்.
இது நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புடைய உணவாகும்.
* சோடா பானம், மது அல்லது பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதற்கு பதிலாக நீங்கள் வெறும் நீரை பருகுவது நல்லது. இது, நுரையீரல் மட்டுமின்றி, உடலில் இருக்கும் நச்சுக்களை போக்கும் திறன் கொண்டது ஆகும்’