Thursday, January 9, 2025
HomeCinemaஹோட்டல் அறையில் மலையாள நடிகர் சடலமாக மீட்பு

ஹோட்டல் அறையில் மலையாள நடிகர் சடலமாக மீட்பு

நடிகர் திலீப் சங்கர் மலையாளத்தில் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார்.

அவர் கடந்த 2 நாளுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.

2 நாள் அறையிலேயே இருந்த அவர் வெளியே வரவே இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் அறையின் உள்ளே சென்று பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்தது.

ஹோட்டல் ஊழியர்கள் தாங்களே கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். அங்கு திலீப் சங்கர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திலீப் சங்கர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திலீப் சங்கரின் திடீர் மரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவரது மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments