Wednesday, January 8, 2025
HomeSportsஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல போர்னில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

105 ரன்கள் முன்னிலை யில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து இருந்தது. லயன் 41 ரன்னிலும், போலண்டு 10 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடை பெற்றது.

333 ரன்கள் முன்னிலை, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது.

ஆஸ்திரேலியா மேலும் 6 ரன் எடுப்பதற்குள் கடைசி விக்கெட்டான லயன் 41 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். அந்த அணி 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது.

போலண்டு 15 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக் கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது.

ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் ஆடியது. குறிப்பாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அணியை காப்பாற்றும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 127 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் (82 ரன்) அடித்து இருந்தார். 18-வது டெஸ்டில் விளையாடும் ஜெய்ஸ்வாலுக்கு இது 10-வது அரை சதமாகும்.

மறுமுனையில் இருந்த ரிஷப்பண்ட் நிதானமாக ஆடினார். 49-வது ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட்டது.

தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.

இதனையடுத்து ரிஷப் பண்ட் 30, ஜடேஜா 2, நிதிஷ் 1, ஜெய்ஸ்வால் 84, ஆகாஷ் தீப் 7, பும்ரா 0, சிராஜ் 0 என வெளியேறினர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments