ஈலோன் மஸ்க் ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார் என ஜெர்மனி அரசாங்க செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் குற்றம் சாட்டியுள்ளார்.
AFD – ஜெர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றத்தால் மட்டும்தான் ஜெர்மனியைக் காப்பாற்ற முடியும் என ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஜெர்மனி செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி ஈலோன் மஸ்க் தனது கருத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கிறிஸ்டியன் ஹாஃப்மேன்,
ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல், வாக்காளர்கள் வாய்க்குப்பெட்டியில் செலுத்தும் வாக்குகளால் முடிவு செய்யப்படுகிறது.
ஜெர்மனி நாட்டின் தேர்தல் அந்நாட்டின் விவகாரத்தைச் சேர்ந்தது.
ஈலோன் மஸ்க்கிற்கு அவரது கருத்தைக் கூற சுதந்திரம் உள்ளது.
ஆனால் அதனைப் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த வருடம் (2025) பெப்ரவரி 23 ஆம் திகதி ஜெர்மனியின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.