நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் ஈர்த்தவர். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் அட்டகாசமான நடிப்பினை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தினார்.
இதனால் அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கீர்த்தி சுரேஷிடம் நடிப்புத் திறமை, கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நடிப்பினை வெளிப்படுத்தும் நுட்பமான பண்டு இருந்தாலும், லைம் லைட்டில் இருக்க, மசாலா படங்களில் அதிகம் கமிட் ஆகிவிடுகின்றார்.
ஒரு சில மசலா படங்களிலும் இவரது நடிப்பு பெரும் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. நானியுடன் இவர் இணைந்து நடித்த தசாரா படத்தில், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தினை மற்றவர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்காது எனக் கூறும் அளவுக்கு பிரமாதமான நடிப்பினை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதை வென்றார். சானி காகிதம் போன்ற, அவுட் ஆஃப் த பாக்ஸ் சினிமாவில் வெறித்தனமான நடிப்பையும் அரக்கத்தனமான நடிப்பையும் வெளிப்படுத்தி மிரட்டினார்.
ஆனால் ஏற்கனவே கூறியதைப்போல், மசாலா படங்களைத் தேர்வு செய்து, சொதப்பி விடுகின்றார். அப்படித்தான் இவரது இந்தி அறிமுகமும் இருந்துள்ளது. முதலில் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டான படம் அஜய் தேவகன் நடிப்பில் வெளியான மைதான் படத்தில்தான்.
இந்தப் படத்தில் நடிக்க கமிட் ஆன பின்னர், கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைத் தாறுமாறாகக் குறைத்து, பார்ப்பதற்கே வேறு ஒருவரைப்போல் காட்சி அளித்ததால், இந்தப் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் கழட்டி விடப்பட்டார்.
இப்படியான நிலையில், தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் கிருஸ்துமஸ்க்கு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்தப் படமும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
தெறி படத்தை இயக்கிய அட்லீ, அதன் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை தயாரித்தார். தெறி படத்தின் ஹிந்தி டப்பிங் வெர்ஷன் ஏற்கனவே யூடியூப்பில் உள்ளது. அப்படி இருந்தும் இவர்கள் ஏன் இந்தப் படத்தை ரீமேக் செய்தார்கள் என ரசிகர்களே கேள்வி எழுப்புகின்றனர்.
பேபி ஜான் படமும் தோல்விப் படமாக மாறியதால், ஹிந்தி படங்களுக்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் ராசியில்லை போலத் தெரிகின்றதே எனவும் ஏழாம் பொருத்தம் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றார்கள்.
டிசம்பர் 12இல் திருமணம் முடித்த கீர்த்தி சுரேஷ் ஹனிமூன் கூட போகாமல், பேபி ஜான் படத்தின் புரோமோசனில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.