அண்மையில் நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்கும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், நிபுணர் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பொருத்தமான பரிந்துரையை அமுல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், வினாக்கள் கசிந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களான ஐ.ஜி.பி பிரேமதிலக்க மற்றும் சமிந்த குமார இளங்கசிங்க ஆகியோர் முறையே 3 மில்லியன் ரூபாய் மற்றும் 2 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த பின்னர், யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.