Friday, May 23, 2025
HomeMain NewsMiddle Eastரஸ்யாவின் இராணுவ அதிகாரிகளை கொலை செய்வதற்கான உக்ரைனின் திட்டம் முறியடிப்பு

ரஸ்யாவின் இராணுவ அதிகாரிகளை கொலை செய்வதற்கான உக்ரைனின் திட்டம் முறியடிப்பு

ரஸ்யா தனது இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களை கொலை செய்வதற்கு உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் வகுத்திருந்த சதித்திட்டத்தை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளை கொலை செய்யும் உக்ரைனின் திட்டத்தினை முறியடித்துள்ளதாக ரஸ்ய கூட்டமைப்பின் பெடரல் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

இந்த சதி திட்டங்களி;ல் தொடர்புபட்ட நான்கு ரஸ்யர்களை கைதுசெய்துள்ளதாகவும் ரஸ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் தங்களின் நடவடிக்கைகளிற்காக ரஸ்ய பிரஜைகளை ஈடுபடுத்தினார்கள் என ரஸ்யாவின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கையடக்க சார்ஜர் போன்று குண்டுகளை உருமறைப்பு செய்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தனர்,பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியின் வாகனத்தில் காந்தத்துடன் பொருத்தப்படவிருந்த கையடக்க சார்ஜர் போன்று உருமறைப்பு செய்யப்பட்ட குண்டினை ஒருவர் கண்டுபிடித்தார் என ரஸ்ய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ஆவணபோல்டர் போன்று உருமறைப்பு செய்யப்பட்ட குண்டினை நபர் ஒருவரிடம் வழங்குவதற்கான திட்டமும் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சதிதிட்டத்தி;ல் தொடர்புபட்டவர்கள் என தெரிவித்து சிலரை ரஸ்ய தொலைக்காட்சி காண்பித்துள்ள

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments