ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் iPhone 14, iPhone SE விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
USB-C port கட்டாயம் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்த விதியின் காரணமாக, Apple iPhone 14 மற்றும் iPhone SE மொடல்களின் விற்பனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில நாடுகளில் இவை ஆப்பிளின் ஓன்லைன் கடையிலிருந்து நீக்கப்பட்டிருந்தன.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளில் இந்த மொடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் போன்ற நாடுகளில் ஐபோன் 14 மற்றும் SE மொடல்கள் விற்பனைக்கு இல்லை.
ஆனால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்பதால், இந்த மொடல்கள் தொடர்ந்து அங்கு கிடைக்கின்றன.
தகவல்களின்படி, ஆப்பிள் 2025 மார்ச் மாதம் புதிய iPhone SE மொடலை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மொடலில் USB-C போர்ட் மற்றும் புதிய வடிவமைப்பு உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.