அமெரிக்க விண்வெளி வீராங்கணையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார்.
கடந்த ஜூன் 5-ந்தேதி விண்வெளிக்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார்.
அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் கூறும்போது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது.