அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொர்பில், பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் பேரணி நடத்தப்பட்டது.
விதிக்கப்பட்ட தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் சிறிது முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், பேரணியில் கலந்துகொள்வதற்கு பாஜக பிரமுகர் குஷ்புவும் வந்திருந்தார்.
இது தொடர்பில் குஷ்பு பேசுகையில், “திமுகவின் ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் எங்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. காரணம் நாங்கள் உண்மையைப் பேசிவிடுவோம் என்று திமுகவுக்கு நன்றாகத் தெரியும்.
இதனால் அனுமதி வழங்க மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் கூறுவதைக் கேட்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்தும் பேரணியை நடத்த முயன்ற குஷ்பூ மற்றும் பாஜகவினரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.