நீண்டகால அமெரிக்க விசா திட்டம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கு இடையே குடியேற்ற மோதல் வெடித்துள்ளது.
திறன்சார் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைக்கும் விசா திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதாவது, குடியேற்ற விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று கோரும் குடியரசுக் கட்சியினருக்கும், தொழில்நுட்பத்துறையிலிருந்து டொனால்ட் ட்ரம்பிற்கு ஆலோசகர்களாக செயற்படும் நபர்களுக்கும் இடையே விவாத மோதல் ஏற்பட்டுள்ளது.
எச் 1 பி விசாக்கள் பற்றிய பகை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து திறமையான தொழிலாளர்களை சில தொழில்களுக்கு அழைத்து வர அனுமதிக்கின்றன.
இந்தத் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களைக் குறைப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர் . ஆனால், உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த நிபுணத்துவத்தை அமெரிக்கா ஈர்க்க அனுமதிக்கிறது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் இந்த விடயம் விமர்சிக்கப்பட்ட போதிலும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ட்ரம்ப் இந்த திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.
இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப், நியூயோர்க் போஸ்ட்டுக்கு அளித்த நேர்காணலொன்றில், “இந்த திட்டத்தை நான் எப்போதும் விரும்பினேன். அதற்கு நான் ஆதரவாகவே இருந்துள்ளேன். அதனால் தான் அந்த திட்டத்தை நாம் தற்போதும் செயற்படுத்துகிறோம்,” என்று கூறியுள்ளார்.
“என்னுடைய நிறுவனங்களில் எச் 1 பி விசாக்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் உள்ளனர். இந்த திட்டத்தின் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்திருக்கிறது இதுவொரு சிறந்த திட்டம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அவருடைய முதல் ஆட்சி காலத்தில் எச் 1 பி விசா விதிகளை கடுமையாக்கினார்.தற்போது ஆதரிக்கும் நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தொழில்நுட்ப பில்லியனரும் எக்ஸ் தளம், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், ட்ரம்ப் முன்மொழிந்த அரசு செயற்றிறன் துறையின் இணை இயக்குநராகவும் பொறுப்பேற்க உள்ள எலான் மஸ்க்கும் அதனை ஆதரிக்கிறார்.
ஏனெனில் இது உலகில் உள்ள தலைசிறந்த பொறியியலாளர்களில் 0.1% நபர்களை ஈர்க்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மஸ்கின் நிறுவனத்தில் எச் 1 பி விசாக்கள் மூலம் அமெரிக்காவிற்கு வருகைத்தந்து பணியாற்றும் நபர்கள் தொடர்பிலும் அவர்களுக்கு வழங்கப்படும் 02 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்கும் குறைவான வருமானம் குறித்து பல விமர்சனங்களை குடியரசுக் கட்சியினரே முன்வைக்கின்றனர்.
குறைந்த வருமானத்திற்கு பணியாளர்களை நியமித்தல், திறமையானவர்களை பணிக்கு அமர்த்தல் போன்றவை அல்லாமல்
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நபர்களின் வருமானத்தை குறைப்பதற்கான செயல்பாடாக காணப்படுகின்றது என்றும் விமர்சகர்கள்
குற்றம் சுமத்துகின்றனர்.
கண்டிக்கத்தக்க முட்டாள்கள் மஸ்க் விசனம்
அவ்வாறான விமர்சகர்களை குடியரசுக்கட்சியில் உள்ள இனவெறி மற்றும் வெறுப்பு மிக்க நபர்கள் என்றும் கண்டிக்கத்தக்க முட்டாள்கள் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இவர்களை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால் குடியரசுக் கட்சி வீழ்ச்சியடையும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.
மற்றொரு விமர்சனத்திற்கு பதில் அளித்த மஸ்க், இந்த திட்டத்தை ஆதரிக்க நான் போர் புரியவும் தயார் என்கிறார்.
இதேவேளை, தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்தும் , விவேக் ராமசாமியும் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் “நம்முடைய அமெரிக்க கலாசாரம் சிறந்ததைக் காட்டிலும் சாதாரணவற்றைக் கொண்டாடுகிறது,” என்று குறிப்பிட்டார். அந்த பதிவில், வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார் ராமசாமி.
அரசு செலவினங்களை கட்டுப்படுத்த ட்ரம்ப் மற்றும் மஸ்கால் நியமிக்கப்பட்ட ராமசாமியின் இந்தப் பதிவைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
“நம்முடைய கலாசாரம் கணித ஒலிம்பியாட்டில் பட்டம் வென்றவர்களைக் காட்டிலும் ‘ப்ரோம்-குயின்களை’ அதிகம் கொண்டாடுகிறது. வகுப்பில் முதல் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களை விட தடகளத்தில் விளையாடும் மாணவர்களையே கொண்டாடுகிறது. இந்த கலாசாரம் சிறந்த பொறியியல் வல்லுநர்களை உருவாக்காது” என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்பின் முதல் ஆட்சியின் போது ஐநாவுக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி,
மஸ்க் ஆகிய இருவருக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “அமெரிக்க பணியாளர்கள் அல்லது அமெரிக்க கலாசாரத்தில் எந்த தவறும் இல்லை, நீங்கள் இப்போது எல்லையை தான் கவனிக்க வேண்டும். நாம் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர வெளிநாட்டவர்களுக்கு அல்ல,” என்றும் அவர் கூறினார்.
ராமசாமி போன்றே ஹாலேவும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தம்பதியினருக்கு பிறந்தார். எச் 1 விசா திட்டத்திற்கு எதிரான தீவிர வலதுசாரி குழுக்களுடன் இணையம் மூலமாக இணைந்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுக்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக ஶ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்துள்ள நிலையில் லாரா லூமர் என்ற ட்ரம்பின் ஆதரவாளர் அதனை விமர்சித்துள்ளார்.
“கிருஷ்ணன் ஒரு தீவிர இடதுசாரி. அவர் ட்ரம்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்ற கொள்கைக்கு நேர் எதிரான நபர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இந்திய குடியேறிகளை “ஆக்கிரமிப்பாளர்கள்” என்று அழைத்தது மாத்திரமின்றி, இனவெறி கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் தனது பதிவுகளுக்கு பதில் அளிப்பது கட்டுப்படுத்தப்படுவதாகவும், பணம் செலுத்தி பெறப்பட்ட சந்தா திட்டத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் மஸ்க் மீதும் அவர் தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்தார்.
எச் 1 பி விசாக்கள்
திறமையான தொழிலாளர்களுக்கான ஹெச் 1 பி விசாக்கள் 1990 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும், ஆனால் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
2004 ஆம் ஆண்டு முதல், வழங்கப்படும் புதிய ஹெச் 1 பி விசாக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 85,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 20,000 அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல்கலைக்கழகங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் பிற இலாப நோக்கற்ற ஆராய்ச்சி குழுக்கள் போன்ற சில நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட அனுசரணை நிறுவனம் அல்லது நிறுவனத்தில் வேலை இருந்தால் மட்டுமே மக்கள் எச் 1 பி விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.