இஸ்ரேல்- பலஸ்தீன போர் நிலைமை காரணமாக காசாவில் 91 வீதமான மக்கள் பாரிய உணவு நெருக்கடியை சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வறுமையை நீக்குவதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலகளாவிய உணவு பாதுகாப்பு நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும் கூட இஸ்ரேலின் மதவாதம் கொண்ட நடைமுறை காரணமாக காசாவிற்கு உதவிகள் வழங்குவதில் நெருக்கடியான நிலை காணப்படுகிறது.
காசாவில் விவசாய நிலங்களில் 68 வீதமானவை, விவசாய கிணறுகளில் 52 வீதமானவை அழிவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காசாவில் 70 வீதமான மீன்பிடி கப்பல்கள் அழிவடைந்துள்ள நிலையில் 95 வீதமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது உலகில் பல அழிவுகளுக்கு முகங்கொடுத்து வரும் பலஸ்தீனின் வடக்கு காசா பகுதியில் போர் காரணமாக 45,300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 107,764க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.