உலகளாவிய ரீதியில் அதிகளவானோர் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.
அந்த வகையில் கூகுள் மூலம் வாட்ஸ் அப் இணையப் பயனர்களுக்கான ரிவர்ஸ் இமேஜ் சர்ச் எனும் அம்சத்தை மெட்டா வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அம்சமானது, குறித்த புகைப்படங்களை சரிபார்க்க நேரடியாக கூகுளில் அந்தப் புகைப்படத்தை பதிவேற்றி அதன் உண்மைத் தன்மையை சோதிக்க உதவும்.
இந்த அம்சம், முதலில் ஒரு புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி தேட அனுமதியளிக்கும்.
இதனை எவ்வாறு பயன்படுத்துவது?
வாட்ஸ் அப் செட்டை ஓபன் செய்து நீங்கள் தேட விரும்பும் படத்தை தொட வேண்டும்.
பின் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டு அதில் ஒப்ஷன் மெனுவை தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்தது, ஓப்ஷன் மெனுவிலிருந்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் விருப்பத்தை தெரிவு செய்ய வேண்டும்.
இப்போது கூகுள் தானாகவே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தை செயல்படுத்த தொடங்கும்.
இறுதியாக நமக்கு அனுப்பப்பட்ட படம் ஒன்லைனில் வேறு எங்காவது இருக்கிறதா அல்லது தவறான தகவல்களுடன் தொடர்புடையதா என்பதை தெரியப்படுத்தும்.