தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
ரியான் ரிக்கெல்டன், பவுமா ஆகியோரின் சதத்தால் தென்னாப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், பெடிங்காம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
பெடிங்காம் 5 ரன்னில் வெளியேறிய நிலையில் அடுத்து விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் களம் இறங்கினார்.
இவர் ரிக்கெல்டனுடன் சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரிக்கெல்டன் இரட்டை சதம் விளாசி 259 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 100 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன் 54 பந்தில் 62 ரன்கள் விளாசினார்.
கேஷப் மகாராஜ் 35 பந்தில் 40 ரன்கள் அடிக்க தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 141.3 ஓவர்களில் 615 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா தலா 3 விக்கெட்டும் மிர் ஹம்சா, குர்ராம் ஷேசாத தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.