ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் குடெர்மெடோவா- உக்ரைனின் கலினினா ஆகியோர் மோதினர். இதில் குடெர்மெடோவா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2-வது அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா- 8-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-2 என எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா- குடெர்மோடோவா பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் லெகேக்கா, ஓபெல்கா ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.