தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைவதால் பல நன்மைகள் ஏற்பட்டாலும் மோசடி போன்ற விடயங்களும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.
முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாட் ஜிபிடி போன்ற ஒரு ஏஐ உதவியை நாடுபவர்கள் பகிரக்கூடாத 5 விடயங்கள் பற்றி பார்க்கலாம்.
1. தனிப்பட்ட தகவல்கள்
சாட்பாட்டிடம் ஒருவர் தகவல்களை கோரும்போது எந்த சூழ்நிலையிலும் தனது தனிப்பட்ட விவரங்களை பகிரக்கூடாது.
பெயர், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பகிரக்கூடாது. இவற்றில் ஏதேனும் ஒரு தகவல் மூலம் அடையாளம் காணப்பட்டு பின்தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
2. பொருளாதார விவரங்கள்
முக்கியமாக வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், ஆதார் எண் ஆகியவற்றை பகிரக்கூடாது. ஏனென்றால் மோசடிகள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
3. பாஸ்வேர்ட்
பாஸ்வேர்ட் என்ன வைக்க வேண்டும் என்று எந்த காரணத்தை கொண்டும் செயற்கை நுண்ணறிவிடம் கேட்கக்கூடாது.
4. ரகசியம்
ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை சாட் பாட் செயலிகளிடம் பகிரக்கூடாது. ஏனெனில் அது இயந்திரம், நாம் கூறும் தகவல்களை ரகசியமாக வைத்திருக்காது.
5. சேமிப்பு
சாட்பாட் செயலில் நாம் சொல்வது, கேட்பது என அனைத்து தகவல்களும் சேமிக்கப்படலாம். இதனால், அதை கேட்காமல், சொல்லாமல் தவிர்ப்பதே நலம்.
தொழில்நுட்பம் மூலம் நம்முடைய வேலைகள் எளிதாவது என்றாலும் அதனை திறம்பட கையாள்வது முக்கியமானது. ஏனென்றால், எதிர்வரும் ஆபத்துக்களில் இருந்து நாம் தப்பிக்க திறம்பட கையாள வேண்டும்.