குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழையானது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இதை எங்கு பார்க்கலாம் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம்.
குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை
2025-ம் ஆண்டிம் முதல் விண்கல் மழையைக் (meteor shower) காண உலகம் தயாராக உள்ளது. குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது.
இது மிகவும் தீவிரமான வருடாந்திர விண்கல் காட்சிகளில் ஒன்றாகும். மேலும் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும்.
இது Boötes விண்மீன் கூட்டத்தின் வடகிழக்கின் ஒரு பகுதியாகும்.குவாட்ரான்டிட்ஸ் என்ற பெயர் தற்போது வழக்கற்றுப் போன குவாட்ரான்ஸ் முரளிஸ் விண்மீன் தொகுப்பிலிருந்து வந்ததுள்ளது.
இதற்கு 1975 ஆம் ஆண்டு பிரெஞ்சு வானியலாளர் ஜேஜே லாலண்டே பெயரிட்டார். இந்த விண்கல் பொழிவை 1830-ம் ஆண்டில் பெல்ஜிய வானியலாளர் அடோல்ஃப் க்யூட்லெட் என்பவர் முதன்முறையாக பார்த்துள்ளார்.
2003 EH1 என்ற சிறுகோளில் இருந்து Quadrantids வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இது 1490-91-ம் ஆண்டில் அழிந்துபோன வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதி என்றும் சொல்லப்படுகிறது.
பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 120 விண்கற்களை பார்க்க முடியும். இந்த ஆண்டு, வட அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் காலையில் பார்க்கலாம்.
இந்த விண்கற்கள் பூமியின் முன்னோக்கி எதிர்கொள்ளும் பக்கம் அதிவேகத்தில் தாக்குவதால் பிரகாசமாக காட்சியளிக்க வாய்ப்புள்ளது. நிலவொளி இல்லாத நிலையில், இது ஆண்டின் சிறந்த விண்கல் காட்சிகளில் ஒன்றாக உள்ளது.
மேலும், அமெரிக்கா, கனடா தவிர, வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவில் விண்கல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, இருப்பினும் தெரிவுநிலை மாறுபடலாம்.
ஜனவரி 4 ஆம் தேதி காலையில் நன்றாக பார்க்கலாம். கடந்த ஆண்டு, 2023 டிசம்பர் 28 முதல் ஜனவரி 12, 2024 வரை குவாட்ரான்டிட்ஸ் காணப்பட்டது.ஆனால், ஜனவரி 3-4 அன்று உச்சம் ஏற்பட்டது.
இந்த உச்சக்கட்டத்தின் போது, பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 120 விண்கற்கள் வரை காண முடிந்தது.