கென்யாவில் இராட்சத வட்ட வடிவிலான 500 கிலோ எடையிலான உலோகம், வானில் இருந்து விழுந்தமை, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது விண்வெளி குப்பை என அந்நாட்டு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த உலோகம், 8 அடி விட்டம், 500 கிலோ எடையில் இருந்தது.
அது, ரொக்கெட்டிலிருந்து பிரிந்த ஒரு பகுதி என்றும், விண்வெளியில் சுழன்று கொண்டிருந்த அந்த குப்பை பூமியில் விழுந்ததாகவும், கென்ய விண்வெளி மையம் உறுதிப்படுத்தியுள்ளது.